மார்ச் 4 நடக்கும் ஆப்பிள் நிறுவன சிறப்பு நிகழ்வு - பட்ஜெட் விலையில் புதிய ஐபோன் உடன் சேர்த்து பல அறிமுகங்கள்!
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) ஆப்பிள் நிறுவனம் வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இது குறித்த அழைப்பிதழில் ஆப்பிள் நிறுவனமானது ஒரு ஸ்பெஷல் ஆன ஆப்பிள் எக்ஸ்பீரியன்ஸ்க்கு தங்களை அழைப்பதாக குறிப்பிட்டு உள்ள
மார்ச் 4 நடக்கும் ஆப்பிள்  நிறுவன  சிறப்பு நிகழ்வு - பட்ஜெட் விலையில் புதிய ஐபோன் உடன் சேர்த்து பல அறிமுகங்கள்!


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

ஆப்பிள் நிறுவனம் வருகிற மார்ச் 4 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்துவதாக அறிவித்து உள்ளது.

இது குறித்த அழைப்பிதழில் ஆப்பிள் நிறுவனமானது ஒரு ஸ்பெஷல் ஆன ஆப்பிள் எக்ஸ்பீரியன்ஸ்க்கு தங்களை அழைப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

ஆப்பிளின் இந்த நிகழ்வு நியூயார்க், லண்டன் மற்றும் ஷாங்காய் முழுவதும் காலை 9 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நிகழ்விற்கான சிறப்பு நேரடி ஒளிபரப்பு ஏதேனும் இருக்குமா என்பது குறித்த விவரங்கள் இல்லை.

ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்வில் பட்ஜெட் விலையில் புதிய ஐபோன் 17இ உட்பட பல வகையான ஆப்பிள் தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் 17இ மாடல் ஆனது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16இ மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆக வரும். இது ஆப்பிள் ஏ19 சிப்புடன் வரலாம் என்றும், இது செயல்திறன் அதிகரிப்பு மற்றும் பல மேம்பாடுகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது டைனமிக் ஐலேண்டுடன் கூடிய 6.1 இன்ச் திரை மற்றும் ஐபோன் 17 சீரிஸில் காணப்படும் அதே 18MP செல்பீ கேமராவையும் கூட பேக் செய்யலாம். ரியர் பேனலில் சிங்கிள் 48MP கேமரா இருக்கலாம். இந்த மாடல் சுமார் $599 (ரூ.54,500) க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மலிவு விலை ஐபோன் மாடலை தவிர, ஆப்பிள் அதன் மேக்புக் பேமிலியை புதுப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப்செட்டுடன் ஒரு புதிய என்ட்ரி லெவல் மேக்புக் அறிமுகம் செய்யப்படலாம். அலுமினிய சேசிஸ் மற்றும் $1000 க்கும் (சுமார் ரூ.90,799) குறைவான விலை நிர்ணயத்தின் கீழ் இது அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் M5 மேக்புக் ஏர், அத்துடன் M5 ப்ரோ மற்றும் M5 மேக்ஸ் மேக்புக் ப்ரோ மாடல்களையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மேக் டிஸ்பிளேக்கள், M4 சிப் உடன் புதுப்பிக்கப்பட்ட ஐபேட் ஏர் மாடல்கள் மற்றும் ஆப்பிள் A18 சிப் உடன் ஒரு புதிய அடிப்படை ஐபேட் ஆகியவற்றையும் நாம் எதிர்பார்க்கலாம்.

Hindusthan Samachar / JANAKI RAM