பட்ஜெட்டில் ஒன்றுமில்லை என்பதால் எதுவும் வராது,திமுகவை அகற்ற வேலை செய்ய வேண்டும் - அண்ணாமலை
கோவை, 17 பிப்ரவரி (ஹி.ச) கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டமன்றத்தில் திமுக அரசு நிதி அறிக்கை திமுக கடந்து வந்த பாதையை நிதிநிலை அறிக்கையில் காணலாம். 9 லட்சத்துக்கு ம
Annamalai


கோவை, 17 பிப்ரவரி (ஹி.ச)

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சட்டமன்றத்தில் திமுக அரசு நிதி அறிக்கை திமுக கடந்து வந்த பாதையை நிதிநிலை அறிக்கையில் காணலாம். 9 லட்சத்துக்கு மேல் கடன் உள்ளது.

அடுத்த நிதி ஆண்டும் 10 லட்சம் மேல் மாறும். 3 லட்சத்து மேல் வருமானம் ஈட்டுவோம் என என கூறினார்கள் ஆனால் செய்யவில்லை. இது வருமானம் ஈட்டாத அரசு கடன் வாங்கும் அரசு.

அண்ணாமலை பல்கலைக்கழக புதுபிற்பிக்கு எங்கு பணம் வரும். 49% விழுக்காடு higher education உள்ளது தற்போது 47% தான் உள்ளது.

ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 29,000 கோடி இருந்ததை 28,687 கோடி தான் ஒதுக்கி உள்ளார்கள்.

கலைஞர் கைவினை திட்டத்தில் 23,000 பேர் தான் அப்ளிகேஷன் கொடுத்துள்ளார்கள், மத்திய அரசு கொண்டு வந்த போது லட்சக்கணக்கான மக்கள் அப்ளை செய்திருந்தார்கள்.

கோவில்கள் புனரமைப்பு க்கு 82 கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது, 8100 கோடி என்றால் வெள்ளை அறிக்கை வேண்டும்.

தமிழகத்திற்கு பூஜ்ஜியம் ரூபாய் கொடுத்த பட்ஜெட், மத்திய அரசு பட்ஜெட் போடும் போது முட்டை கொடுத்தார்கள் அது தற்போது தான் புரிகிறது.

SCTC பணத்தை தருவது என்றால் அது ஏற்புடையது அல்ல. Accounting Fraud செய்து தான் இதனை செய்கிறார்கள்.

கடைசி பட்ஜெட்டில் சென்னை போராட்ட களமாக உள்ளது, ஆசிரியர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏதாவது செய்வார்களா என பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் செய்யவில்லை.

அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்றால் இனி எதுவும் வராது.

அவர்கள் திமுகவை அகற்ற வேலை செய்ய வேண்டுமே தவிர வெயிலில் போராடினால் ஒன்றும் நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN