Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) வழங்கும் சென்னை நந்தம்பாக்கத்தின் வர்த்தக மையத்தில் புதுப்பொலிவுடன் உருவாகியுள்ள 'பேர்ப்ரோ 2026' எனும் வீட்டு வசதி கண்காட்சி பிப்ரவரி 20 முதல் 22 வரை மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை பிப்ரவரி 20 அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
இதன் சிறப்பு தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் கிரெடாய் சென்னையைச் சார்ந்த 80-க்கும் அதிகமான கட்டுமான நிறுவனங்கள் தங்கள்
500-க்கும் மேற்பட்ட திட்டங்களை காட்சிப்படுத்த உள்ளார்கள்.
பாரத ஸ்டேட் வங்கி இந்த கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்சராகவும், வங்கியியல் கூட்டாளராகவும் களம் இறங்கி வீட்டுக்கடன் வசதிகளை வழங்க காத்திருக்கிறது.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல முதன்மைப் பொது மேலாளர் விவேகானந்த சௌபே அவர்கள் கூறுகையில்,
இதில் வீட்டுக்கடன் வாங்குவோருக்கு, செயல்பாட்டுக் கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி உண்டு. மேலும் 'சிபில்' ஸ்கோரின் அடிப்படையில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வெறும் 7.10%-லிருந்து தொடங்குகிறது. அதிலும் சிறந்த 'சிபில்' ஸ்கோா் வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதமாக 7.1% மட்டுமே வசூலிக்கப்படும்.
என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b