Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 17 பிப்ரவரி (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயல்பட்டி தெற்கு தெருவில் பிரசித்தி பெற்ற கழுகுடை அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் திருவிழாவில் காப்பு அணிந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இரண்டாம் நாள் திருவிழாவில் கழுவுடை அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் திருநீறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி நடத்தப்பட்டது நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்.
பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மூன்றாம் நாள் திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பாண்டியன், பொருளாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மகேஸ்வரன், மற்றும் நிர்வாக கமிட்டினர் செய்திருந்தனர்
Hindusthan Samachar / Durai.J