Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
வருமானத்தை மறைத்தது தொடர்பாக ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கடந்த நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுவில் வருமானத்தை மறைத்தது தொடர்பாக விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
எம்.பி. வருமானத்தை மறைத்தது தொடர்பாக புகார் அளித்தும், வருமான வரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல் எம்.பி. நவாஸ்கனி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளதாக அளித்த புகார் குறித்து சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
Hindusthan Samachar / P YUVARAJ