Enter your Email Address to subscribe to our newsletters

பல்லேகல்லே, 17 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக்கோப்பை போட்டித் தொடர் இந்தியா் மற்றும் இலங்கையில் களைகட்டி வருகிறது.
நேற்று கொழும்புவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை மற்றும் அஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து அஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டது.
மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அபார அரைசதத்தின் உதவியால் அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திக்கொண்டு இலங்கை அணி களத்தில் இறங்கியது.
நிசாங்கா 32 பந்துகளில் மின்னல் வேக அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்துகளில் அரைசதம் விளாசினர். குசால் மெண்டிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்து வெற்றியைக் கைப்பற்றியது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM