Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியில் பாஜக, சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவார்) ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
முதல் - அமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார்.
இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து மகாராஷ்டிரா அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் இந்த 5% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.
2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த அவசர சட்டம் காலாவதியானது. மேலும், மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது.
உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த சட்ட ரீதியான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்பதை மகாராஷ்டிரா அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கல்வி மற்றும் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசை சிறுபான்மையினருக்கு எதிரானது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மகாயுதி கூட்டணி அரசு இந்த நடவடிக்கையை எடுத்ததன் மூலம் அநீதி இழைத்ததாக முன்னாள் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் நசீம் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b