Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச)
விடுதலை போராட்ட வீரர் சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸலத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள்
தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த - பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.
இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்.
இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ