Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 18 பிப்ரவரி (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனபள்ளியில் உள்ள கட்லப்பள்ளியை சேர்ந்த கைத்தறி தொழிலாளி கோபிநாத்.
அதே பகுதியை சேர்ந்த கொடூரன் குலவர்தன் கோபிநாத்தின் 7 வயது மகளை ஆசைவார்த்தை கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.
அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பின் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டிலிருந்த தண்ணீர் ட்ரம்மில் வீசி சென்று விட்டான்.
தங்கள் மகளை காணாமல் தேடிய கோபிநாத் குடும்பத்தினர் விசாரித்த போது குலவர்தன் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
கொடூரன் குலவர்தன் வீட்டில் சென்று பார்த்தபோது வீடு தாளிடப்பட்டிருந்தது. ஆனால் யாரும் இல்லை.
எனவே சிறுமியை தீவிரமாக தேடி பார்த்த போது அந்த சிறுமியின் உடல் குலவர்தன் வீட்டில் உள்ள தண்ணீர் டிரம்மில் கிடந்தது தெரியவந்தது.
இது பற்றி தகவல் அறிந்த மதனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து குலவர்தனை தீவிரமாக தேடி வந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த பொதுமக்கள், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் குலவர்தனை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குலவர்த்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அளித்த உறுதிமொழியின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் குலலவர்த்தன் அதே பகுதியில் உள்ள கனசனோனப்பள்ளி ஏரியில் சவமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் குலவர்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதன பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam