கோவையில் டெக்னோவா -2026 செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப கண்காட்சி
கோவை, 18 பிப்ரவரி (ஹி.ச.) ஏ ஐ டெக்னாலஜி தொழில் நுட்பங்கள் தொடர்பான திறன்களை கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில், செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு மாதிரிகளை மாணவர்கள் காட்சி படுத்தி அசத்தல்
கண்காட்சி


கோவை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

ஏ ஐ டெக்னாலஜி தொழில் நுட்பங்கள் தொடர்பான திறன்களை கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில், செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு மாதிரிகளை மாணவர்கள் காட்சி படுத்தி அசத்தல்

கோவை பேரூர் பகுதியில் உள்ள எஸ்.எம்.எஸ்.கலை அறிவியல் கல்லூரியில் டெக்னோவா 2026 எனும் ஏ.ஐ.செயற்கை நுண்ணறிவு அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது.

தகவல் தொழில் நுட்பத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் ஏஐ டெக்னாலஜி தொழில் நுட்பங்கள் தொடர்பான திறன்களை கல்லூரி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில் மாணவர்கள் தங்களது பல்வேறு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மாதிரிகளை காட்சி படுத்தினர்.

முன்னதாக கண்காட்சியை கல்லுரி முதல்வர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.

பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது தொடர்பான பல்வேறு மாதிரிகளை மாணவர்கள் காட்சி படுத்தி அது குறித்து நேரடி செயல் விளக்கங்களை அளித்தனர்.

இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை பேரிடர் கால முன்கூட்டி தகவல் அளிப்பது, மருத்துவம், குற்ற வழக்கு புலனாய்வுகளில் ஏ.ஐ.பயன்பாடு,

அலுவல் பணி, ரோபோட்டிக்,உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறித்த மாதிரிகள் கண்காட்சியில் இடம் பிடித்தன.

கண்காட்சியை பார்வையிட்ட பாரதியார் பல்கலைகழக கணிணி துறை பேராசிரியை முனைவர் அமுதா மாணவர்களின் சிறந்த தொழில் நுட்ப மாதிரிகளை தேர்வு செய்து பரிசுகள் வழங்கினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam