வலையில் சிக்கிய 4 அரிய வகை ஆமைகள் - பத்திரமாக கடலுக்குள் விட்ட மீனவர்கள்
ராமநாதபுரம், 18 பிப்ரவரி (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மீனவர்கள் இயந்திரங்கள் இல்லாமல் கடலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத பாரம்பரிய மீன்பிடிப்பு முறையான கரைவலை மீன்பிடிப்பு முறையில் குடும்பம் குடும்பமாக ஈடுபட்டு வர
Turtles


ராமநாதபுரம், 18 பிப்ரவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மீனவர்கள் இயந்திரங்கள் இல்லாமல் கடலுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத பாரம்பரிய மீன்பிடிப்பு முறையான கரைவலை மீன்பிடிப்பு முறையில் குடும்பம் குடும்பமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள தென்கடல் மன்னார் வளைகுடா கடலில் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் பெருந்தலை ஆமை, சிந்தாமை, ஆலிவ் ரெட்லி ஆமை போன்ற ஐந்திற்கும் மேற்பட்ட ஆமைகள் வாழ்ந்து வருகின்றன.

இதுபோன்ற அரியவகை ஆமைகள் மீனவர்கள் வலையில் சிக்கினால் அதனை பத்திரமாக பாதுகாப்பாக கடலில் விடும் பணி ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வலையில் சிக்கும் ஆமைகளை மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தனுஷ்கோடியில் கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்ட போது வலையில் மீன்களுடன் 4 அரியவகை ஆமைகள் சிக்கியுள்ளது. இதனை பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக மீண்டும் மீனவர்கள் கடலில் விட்டுள்ளனர்.

மீனவர்களின் இச்செயலை வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்

Hindusthan Samachar / ANANDHAN