Enter your Email Address to subscribe to our newsletters

பல்லேகல்லே, 18 பிப்ரவரி (ஹி.ச.)
டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் களைகட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நேற்று பல்லேகல்லே மைதானத்தில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்த தயாராக இருந்தன.
ஆனால், ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே மழை தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.
மழை விட்டால் போட்டி தொடங்கும் என நடுவர்கள் காத்திருந்தனர்.
இருப்பினும், விடாமல் பெய்த மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
ஏற்கனவே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இருந்த ஜிம்பாப்வே அணி, தற்போது 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதே நேரத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM