உங்களைத் தேடி உங்கள் ஊரில் நலத்திட்டப் பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி, 18 பிப்ரவரி (ஹி.ச.) உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம்,முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடை
Thoothukudi District Collector inspects


தூத்துக்குடி, 18 பிப்ரவரி (ஹி.ச.)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம்,முதலூர் ஊராட்சியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடைபெற்ற கால்நடை வளர்ப்போருக்கான பராமரிப்பு தொழில் நுட்ப பயிற்சி வகுப்பினை அம்மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (18.02.26 )குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட விழுதுகள் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

மேலும், முதலூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலுள்ள வட்டார பொது சுகாதார ஆய்வகத்தினை ஆட்சியர் பார்வையிட்டார். பின்னர், படுக்கப்பத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டார்.

பின்னர் பெரியதாழை ஊராட்சியில் ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதலத்தினை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று 18.2.26 பார்வையிட்டார்.

ஆய்வின் போது அரசுத்துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b