சத்ரபதி சிவாஜி ஜெயந்தி - பிரதமர் மோடி அஞ்சலி
புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.) மராட்டிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவிய மாவீரரான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான பிப்ரவரி 19-ம் தேதி ''சிவாஜி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. முகலாயர்களின் ஆட்சியை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சிவாஜிக்கு அவ
இன்று சத்ரபதி சிவாஜி ஜெயந்தி  - பிரதமர் மோடி அஞ்சலி


புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)

மராட்டிய சாம்ராஜ்யத்தை இந்தியாவில் நிறுவிய மாவீரரான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளான பிப்ரவரி 19-ம் தேதி 'சிவாஜி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

முகலாயர்களின் ஆட்சியை எதிர்த்து துணிச்சலுடன் போராடிய சிவாஜிக்கு அவரது தலைமை மற்றும் நிர்வாகத்தின் காரணமாக சத்ரபதி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, தொலைநோக்குத் தலைவர், திறமையான நிர்வாகி மற்றும் சுயராஜ்யத்தின் வீரராக இருந்த ஒரு சிறந்த ஆளுமைக்கு நமது மரியாதை செலுத்துகிறோம். அவரது வீரம் நம்மை ஊக்குவிக்கட்டும்.

அவரது நல்லாட்சி நம்மை வழிநடத்தட்டும். அவரது நீதி உணர்வு மற்றும் சுயமரியாதை நமது சமூகத்தை மேம்படுத்தட்டும்.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். அவரது துணிச்சலும் நிர்வாகமும் அனைவரையும் வழிநடத்துகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b