Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23-ந்தேதி முதல் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க. மகளிர் அணியினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த பரப்புரைக்கான தொகுதி வாரியான பயிற்சி கூட்டம் நாளை தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பின்படி, நாளை மாலை 6.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், 'வெல்லும் தமிழ் பெண்கள்' பரப்புரைக்கு தொகுதி அளவில் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b