Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் ஆன்மீக நபர்களில் ஒருவரான ராமகிருஷ்ண பரமஹம்சர், உலகளாவிய நல்லிணக்கம், பக்தி மற்றும் தன்னலமற்ற சேவை இவற்றிற்காக நினைவு கூரப்படுகிறார்.
ஆன்மீகத் தலைவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள்.
ஆன்மீகத்தையும் தியானத்தையும் ஒரு முக்கிய உயிர் சக்தியாக அவர் நிறுவிய விதம் ஒவ்வொரு சகாப்தத்திலும் மனிதகுலத்திற்கு தொடர்ந்து பயனளிக்கும்.
அவரது உன்னதமான எண்ணங்களும் செய்திகளும் என்றென்றும் உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கும்.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b