Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
வலதுசாரி குழுவான கார்ணி சேனாவின் செய்தித் தொடர்பாளார் ராஜ் சிங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த நபர், சமீபத்தில் நிறைவடைந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் மக்களவையில் அவைத்தலைவர் ஓம் பிர்லாவை 25 காங்கிரஸ் எம்பிக்கள் திட்டியதையடுத்து, அனைத்து பாஜக மற்றும் காரணி சேனா தொண்டர்களும் கோபடைந்ததாக அந்த விடியோவில் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால், நாங்கள் அந்த எம்பிக்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை சேதப்படுத்துவோம்.
ராகுல் காந்தி, கவனமாகக் கேளுங்கள், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்தால் நாங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்து உங்களைச் சுட்டுக் கொல்வோம்.
மக்களவையில் அவைத்தலைவரைத் தாக்கிப் பேசிய எம்.பி.க்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட வேண்டும், இல்லையெனில் ஒவ்வொறுவரையும் நாங்கள் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் இந்த விடியோ வெளியான நிலையில், போலீஸார் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தானின் கோட்டாவில் ராஜ் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.
Hindusthan Samachar / GOKILA arumugam