தமிழ் இலக்கியத்திற்காக பாடுபட்ட உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் இன்று!
தமிழ்நாடு, 19 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்திற்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று, அழிந்து மறை
H


தமிழ்நாடு, 19 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்திற்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று, அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத்தமிழ் இலக்கியங்கள் பலவற்றை தேடித் தேடி அச்சிட்டு பதிப்பித்தார்.

இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார்.

அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

தமிழ் இலக்கியத்திற்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 1942ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J