Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களின் தலைமையிலான குழுவின் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,
இலவசத் திட்டங்களினால் நாட்டின் பொருளாதார உயர்வு தடைபடுகிறது.
தொடர்ந்து இலவசங்களை அளிப்பதன் காரணமாக மாநிலங்கள் பணப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றன.
உதவித் தொகையும், சம்பளமும் வழங்குகிறீர்கள். இதைத் தவிர எந்த அரசும் உருப்படியாக எதுவும் செய்வதில்லை. 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு பணம் எவ்வாறு கிடைக்கிறது..? என்று கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே பெரும்பாலான இந்திய மாநிலங்கள் வருவாய் பற்றாக்குறையில் தள்ளாடுகின்றன, இருந்தும் நீண்ட கால வளர்ச்சிக்கான திட்டங்களை கவனத்தில் கொள்ளாமல் பெரிய அளவில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பொருளாதார நிலையை சட்டை செய்யாமல், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச உணவு, சைக்கிள் அல்லது மின்சாரம் போன்ற திட்டங்களை தருவதைவிட, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நிலையான வருமானம் தரும் வழிகளை உண்டு பண்ணுவதிலும் மாநிலங்கள் கருத்தூன்ற வேண்டும்.என்று அறிவுறுத்தியது.
இதனை அடுத்து இந்த வழக்கின் விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவிப்பாக அனுப்பியுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM