டி20 உலகக் கோப்பை - நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா
அகமதாபாத், 19 பிப்ரவரி (ஹி.ச.) 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 குழுக்கள் பங்கேற்றுள்ளன. இந்த குழுக்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. லீக் சுற்றின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலு
டி20 உலகக் கோப்பை - நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா


அகமதாபாத், 19 பிப்ரவரி (ஹி.ச.)

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இதில் 20 குழுக்கள் பங்கேற்றுள்ளன. இந்த குழுக்கள் 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. லீக் சுற்றின் இறுதியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெறும் குழுக்கள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும்.

டி20 உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் போட்டியிட்டன.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன் பிறகு ஆடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களும் எடுத்தனர்.

நெதர்லாந்து அணியின் சார்பில் வான் பீக் 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது.

பாஸ் டி லீட் 33 ரன்களும், ஜாக் லயன் 26 ரன்களும், மைக்கேல் லெவிட் 24 ரன்களும் எடுத்தனர். இறுதியில், நெதர்லாந்து அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.

Hindusthan Samachar / JANAKI RAM