Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 19 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையரின் 172 - வது பிறந்த நாளையொட்டி, இன்று (19.2.2026) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவப் படத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உ.வே.சா. பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!
மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக்கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது திராவிட மாடல் அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b