மத்திய பட்ஜெட் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக இல்லை - CTR நிர்மல்குமார் விமர்சனம்
சென்னை, 02 பிப்ரவரி (ஹி.ச) தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த CTR நிர்மல்குமார் பேசியபோது, பட்ஜெட்டை அமைப்பதற்காக
Ctr


சென்னை, 02 பிப்ரவரி (ஹி.ச)

தமிழக வெற்றிக் கழகத்தின் 3 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த CTR நிர்மல்குமார் பேசியபோது,

பட்ஜெட்டை அமைப்பதற்காக எந்த ஒரு தனிப்பட்ட குழுவும் உருவாக்கப்படவில்லை என்றும்,

மக்களுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய அம்சங்கள் இதில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், வரிக் குறைப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என்றும்,

மூலப்பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் மாறி வரும் சூழலில்

மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

கட்சி செயல்பாடுகள் குறித்து பேசிய அவர்,

கட்சி நிர்வாகிகள் தேவையான நேரங்களில் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும்,

செய்தியாளர் சந்திப்பு மட்டுமே ஒரு பெஞ்ச்மார்க் அல்ல, விஜய்

மக்களுடன் நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், சுற்றுப்பயணம் தொடர்பாக தற்போது திட்டமிட்டு வருவதாகவும்,

அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

என்.டி.ஏ கூட்டணி குறித்து பேசிய CTR நிர்மல்குமார்,

அனைவரும் NDA கூட்டணி என்று தான் கூறுகின்றனர்

அதிமுக தலைமையில் கூட்டணி செயல்படுகிறது என்றாலும் என் டி. ஏ என்றே சொல்லப்பட்டு வருகிறது,

முதல்வர் வேட்பாளர் யார் என்பதும் இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

சைக்கிள் பயணம் தொடர்பாக பரவிய தகவல்களையும் அவர் மறுத்தார்.

திமுகவை வைத்து சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்றும்,

அந்த குற்றச்சாட்டு அப்போதே மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிற கட்சிகளைப் போல மக்களை நேரடியாக சந்திக்க

எங்களுக்குத் தேவையான அனுமதிகள் வழங்கப்படுவதில்லை என்றும்,

சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்குக் கூட தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த சூழ்நிலை விரைவில் மாறும் என்றும்,

மக்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ