Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 02 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் மற்றும் மண்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய வளமோ, தொழில் வளமோ இல்லாததால் அப்பகுதி மக்களில் 80 சதவீதம் பேர் நூறு நாள் வேலை திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர்.
தற்போது நூறு நாள் வேலை திட்டத்தில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளர்.
தற்போது, அப்பகுதியில் பள்ளி வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (பிப்ரவரி 02) காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கயத்தார், மண்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பெண்கள் திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b