பஞ்சாபில் போலீஸார் 2 பேர் இறந்த நிலையில் மீட்பு
குர்தாஸ்பூர், 22 பிப்ரவரி (ஹி.ச.) பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டம் அடியான் பகுதியில் குர்நாம் சிங் மற்றும் அசோக் குமார் எனும் 2 போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். அசோக் குமார் ஊர்க்க
பஞ்சாபில்  போலீஸார் 2 பேர்  இறந்த நிலையில் மீட்பு


குர்தாஸ்பூர், 22 பிப்ரவரி (ஹி.ச.)

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டம் அடியான் பகுதியில் குர்நாம் சிங் மற்றும் அசோக் குமார் எனும் 2 போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக இன்று மீட்கப்பட்டுள்ளனர்.

அசோக் குமார் ஊர்க்காவல் படை வீரர் என்றும் குர்நாம் சிங் குர்தாஸ்பூரில் உள்ள டோரங்லா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் என்றும் அப்பகுதி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பனார்சி தாஸ் தெரிவித்துள்ளார்.

தகராறு காரணமாக இரண்டு போலீஸாரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து கூறிய போலீசார் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இரண்டு போலீசார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குர்தாஸ்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b