மிசோரம் மாநில முதலமைச்சருக்கு அமித் ஷா பிறந்தநாள் வாழ்த்து
புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அவர்களுக்கு இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிசோரம் ம
மிசோரம் மாநில முதலமைச்சருக்கு அமித் ஷா  பிறந்தநாள் வாழ்த்து


புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மிசோரம் மாநில முதலமைச்சர் லால்டுஹோமா அவர்களுக்கு இன்று அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிசோரம் முதலமைச்சர் லால்டுஹோமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மிசோரம் மாநில மக்களுக்கு தொடர்ந்து சிறந்த முறையில் சேவை செய்ய அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும் இறைவன் அருளட்டும் என்று வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி மிசோரம் குழு தலைமையகத்திற்கான தேசிய மாணவர் படை அமைப்பை முதலமைச்சர் லால்டுஹோமா தனது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதற்கு முன்னர், மிசோரம் தேசிய மாணவர் படை அசாம் மாநிலத்தில் இருந்தே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM