பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்!
புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.) அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபென் குமார் போரா இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பூபென் குமார் போரா கடந்த 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்!


புதுடெல்லி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பூபென் குமார் போரா இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

பூபென் குமார் போரா கடந்த 16-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

எனினும், அவருடைய விலகல் கடிதத்தை காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதே சமயத்தில் ராகுல் காந்தி அவர்களும் தொலைபேசியில் அவருடன் உரையாடினார்.

அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய அவகாசம் கோரியிருந்தார். இந்நிலையில், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவருடைய இல்லத்திற்கு வருகை தந்து, பிப்ரவரி 22-ஆம் தேதி பூபென் குமார் போரா பாஜகவில் இணைவதாக அறிவித்தார்.

அதற்கிணங்க, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திலீப் சைகியா முன்னிலையில் பூபென் குமார் போரா இன்று பாஜகவில் இணைந்தார்.

அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான 'வாஜ்பாய் பவன்'-இல் நடைபெற்ற நிகழ்வில், போரா அவர்கள் பாஜக உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டார். அவருடன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஞ்சு போராவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM