திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்
புதுக்கோட்டை, 22 பிப்ரவரி (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் மாசித் திருவிழா வெகு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்


புதுக்கோட்டை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மாசித் திருவிழா வரும் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 9ஆம் தேதி வரை விழா நடை பெறவுள்ளது.

மாசித் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பூச்சொரிதல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று காலை முதலே அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி பறவை காவடி அக்னி சட்டி ஏந்தி தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b