கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புதிய வசதி
சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியாவில் கோடிக்கணக்கானோர் கூகிள் மேப்ஸ் செயலியை உபயோகிக்கின்றனர். குறிப்பாய், கூகிள் மேப்ஸ் செயலியின் ஒவ்வொரு அம்சமும் மிகவும் பயன்பாடு மிக்கதாக இருக்கிறது. அதுபோலவே, கூகிள் நிறுவனம் இந்த கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில்
கூகுள் மேப்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புதிய வசதி


சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியாவில் கோடிக்கணக்கானோர் கூகிள் மேப்ஸ் செயலியை உபயோகிக்கின்றனர். குறிப்பாய், கூகிள் மேப்ஸ் செயலியின் ஒவ்வொரு அம்சமும் மிகவும் பயன்பாடு மிக்கதாக இருக்கிறது.

அதுபோலவே, கூகிள் நிறுவனம் இந்த கூகிள் மேப்ஸ் பயன்பாட்டில் தொடர்ந்து புதுப்புது அம்சங்களைச் சேர்த்த வண்ணம் இருக்கிறது. தற்போது ஒரு புதிய வசதியை கூகிள் மேப்ஸ் செயலியில் இணைத்துள்ளது.

குறிப்பாக நடந்து போவோர், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கென்றே ஒரு தனித்துவமான வசதியை கூகிள் நிறுவனம் கூகுள் மேப்ஸில் சேர்த்துள்ளது. அதாவது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவான ஜெமினி உதவியாளரை (Gemini Assistant) நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் வழித்தடங்காட்டலுக்கும் இப்போது கூகிள் இணைத்துள்ளது.

முன்னதாக கூகிள் மேப்ஸில் இந்த வசதி வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே இருந்தது. இனி இந்தச் சிறப்பு அம்சம் அனைவருக்கும் கிடைக்கும்.

பொதுவாக சாலையில் நடந்து செல்லும்போதோ அல்லது சைக்கிள் ஓட்டும்போதோ கைபேசியை கையில் வைத்துக்கொண்டு பார்ப்பது மிக ஆபத்தானது.

எனவே இந்த புதிய மேம்படுத்தலின் மூலம் ஹே கூகிள் (Hey Google) என்று சொன்னாலே போதும், கூகிள் மேப்ஸில் உள்ள ஜெமினி உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கும். நீங்கள் போக வேண்டிய இடத்திற்கான பாதையை வாய்மொழியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அதோடு உங்கள் கைகள் சுதந்திரமாகவும் ( Hands-free), கண்கள் சாலையை பார்த்தபடியும் இருப்பதை இந்த கூகிள் மேப்ஸ் உறுதி செய்கிறது. கூகிள் மேப்ஸில் உள்ள இந்த புதிய வசதி வெறும் வழிகாட்டியாக மட்டும் செயல்படாமல், நீங்கள் நடந்து போகும்போது, நான் இப்போது எங்கே இருக்கிறேன், அருகில் நல்ல உணவகம் ஏதாவது உள்ளதா? என்று கேட்டால் கூட ஜெமினி உடனடியாக பதில் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் நீங்கள் சைக்கிளில் செல்லும்போது, நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் கூகிள் மேப்ஸில் உள்ள ஜெமினி தெளிவாகச் சொல்லிவிடும். அதுமட்டுமின்றி வழியில் உள்ள மின்னேற்றும் நிலையங்கள் (charging stations) போன்ற தகவல்களையும் இந்த ஜெமினி வசதி வழங்கும். மேலும் நீங்கள் பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போதே இன்னும் 10 நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று அம்மாவுக்கு செய்தி அனுப்பு என்று சொன்னால், அதுவே தட்டச்சு செய்து அனுப்பிவிடும்.

ஆக, கூகிள் மேப்ஸில் சேர்க்கப்பட்டுள்ள இந்த ஜெமினி வசதி அனைத்து மக்களுக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி கூகுள் மேப்ஸில் வந்துள்ள இந்தப் புதிய வசதியை எப்படி உபயோகிப்பது என்று பார்க்கலாம்.

வழிமுறை-1: முதலில் கூகிள் மேப்ஸை திறக்கவும்.

வழிமுறை-2: அடுத்து நீங்கள் போக வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கவும்.

வழிமுறை-3: அதன் பின்பு நடப்பது (Walking) அல்லது சைக்கிள் ஓட்டுவது (Cycling) முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4: இப்போது மைக் ஐகானை தட்டவும் அல்லது ஹே கூகிள் என்று சொல்லவும்.

இவ்வளவுதான், இனி அதுவே நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குத் தெளிவாக வழியைக் கூறும். மேலும் இந்த வருடம் கூகிள் மேப்ஸ் செயலியில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கூகிள் மேப்ஸில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM