Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 22 பிப்ரவரி (ஹி.ச.)
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவர் உடல்நலம் குறித்து விசாரித்து வந்த நிலையில், நாட்டின் துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அலைபேசி வாயிலாக தன்னை தொடர்பு கொண்டு உடல்நலம் விசாரித்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
பாரதத்தின் துணை குடியரசுத் தலைவர் மாண்புமிகு C.P.ராதாகிருஷ்ணன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பூரண ஆரோக்யத்தோடு தேசப்பணியாற்ற இறைவன் அருள்புரிய பிரார்த்தனை செய்வதாகக் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றயினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்து வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராணி வேலுநாச்சியார் அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செய்திருக்கிறார்.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ