இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
புதுடெல்லி,22 பிப்ரவரி (ஹி.ச.) இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை மீரட் மெட்ரோ நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங
மோடி


புதுடெல்லி,22 பிப்ரவரி (ஹி.ச.)

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை மீரட் மெட்ரோ நிறுவனம் வழங்குகிறது.

இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த மெட்ரோ ரயில்கள் அதிகமாக மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

இந்தியத் தலைநகர் டெல்லி - மீரட் இடையே 82 கிலோமீட்டர் தூரத்துக்கு இயக்கப்படும்.

இதன் மூலம் டெல்லியில் இருந்து மீரட் நகரை ஒரு மணி நேர பயணத்தில் சென்றடையலாம்.

இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கிலோமீட்டராகும்.

இதன்,தொடக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்குப் பகுதி வரை ரயிலில் சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam