காஷ்மீர் கிஸ்த்வார் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினரின் நேரடி மோதல்
ஜம்மு, 22 பிப்ரவரி (ஹி.ச.) ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஸ்த்வார் வட்டாரத்தில், சத்ரூ எனும் இடத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, காஷ்மீர் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அந்த
காஷ்மீர் கிஸ்த்வார் பிராந்தியத்தில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினரின் நேரடி மோதல்


ஜம்மு, 22 பிப்ரவரி (ஹி.ச.)

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஸ்த்வார் வட்டாரத்தில், சத்ரூ எனும் இடத்தில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து, காஷ்மீர் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அந்த இடத்தை நோக்கி விரைந்தனர்.

அவ்வேளையில், அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

உடனடியாக பதிலடி தரும் வகையில், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதன் விளைவாக, அப்பகுதியின் கட்டுப்பாட்டைப் படையினர் தங்கள் வசம் கொண்டு வந்து, தீவிரவாதிகளை நோக்கித் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM