ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
திருச்சி, 22 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சி மாவட்டம், முசிறி அருகே கரிகாலி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி திருக்கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவுற்று மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழா
Maha Kumbabhishekam ceremony


திருச்சி, 22 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கரிகாலி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி திருக்கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவுற்று மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சுப்ரமணிய ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, கோபுர கலச ஸ்தாபனம், மகா பூர்ணாஹீதி, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்கள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

மேலும் ஸ்ரீ செங்கமா முனியப்ப சுவாமி, செங்கமலை நாச்சியார், தனி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் பெற்று சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b