Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 22 பிப்ரவரி (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில் உள்ள தூய
மிகாவேல் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜீவானந்தம் அந்தப்
பள்ளியில் சக ஐந்து மாணவர்களால் கழிவறையில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு
நெஞ்சு எலும்பு உடைய பட்ட நிலையில் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார்
அளித்து எந்த விதை நடவடிக்கும் எடுக்க வில்லை.
சாத்தான்குளம் டிஎஸ்பி-யிடம்
புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வீடியோ காலில் பேசினார்.
அப்போது கண்ணீர் மல்க பேசிய மாணவனுடைய தாய் எனக்கு என் ரெண்டு
பிள்ளைகளும் படிக்க வேண்டும் ஐயா என்னுடைய மகன் தாக்கப்பட்டு புகார் அளித்தும் காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
நான் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்ததால் என்னுடைய இரண்டு பசங்களையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன்.
ஆனால் இப்படி ஒரு கொடுமை
நடக்கிறது. பள்ளியில் மாணவர்கள் சண்டை போட்டா கூட என்னுடைய மகன் மூக்கில் இருந்த ரத்தம் வரும் வரை தாக்கப்பட்டும் எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை.
பள்ளியில் அன்று முழுவதும் இருக்க வைத்து மாலையே அனுப்பி வைத்துள்ளனர் . எந்த
மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் அழக்களிக்கப்பட்ட என் மகன் இதனால் அந்த
பள்ளி நிர்வாகத்தின் மீதும் ஆசீர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக்கும் என் மகனுக்கும் பாதுகாப்பு
வேண்டும் என்று கண்ணீர் மல்க திருமாவிடம் கூறினார்.
இந்நிலையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்
பேசுவதாக திருமாவளவன் உத்தரவாதம் உத்திரவாதம் அளித்து, ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam