20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் - 'சூப்பர் 8' சுற்றில் இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை
ஆமதாபாத், 22 பிப்ரவரி (ஹி.ச.) 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் விளையாடின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முத
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் - 'சூப்பர் 8' சுற்றில் இன்று இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை


ஆமதாபாத், 22 பிப்ரவரி (ஹி.ச.)

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பங்கேற்ற 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் விளையாடின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் 'சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. 'சூப்பர் 8' சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் 1-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.

இந்தத் தொடரில் தற்போது 'சூப்பர் 8' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

இந்த இரண்டு அணிகளும் சர்வதேச 20 ஓவர் போட்டியில் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 21 ஆட்டங்களிலும், தென்னாப்பிரிக்கா 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. 20 ஓவர் உலகக் கோப்பையில் 7 முறை சந்தித்ததில் இந்தியா 5-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் பின்வருமாறு:

இந்தியா: அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.

தென்னாப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), குயின்டான் டி காக், ரியான் ரிக் கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ், மார்கோ யான்சென், ககிசோ ரபடா அல்லது அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி.

Hindusthan Samachar / JANAKI RAM