திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா
ஈரோடு, 22 பிப்ரவரி (ஹி.ச.) ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி முதல் யாத்ரா தனம் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 6.45 ம
திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் இன்று மகா கும்பாபிஷேக விழா


ஈரோடு, 22 பிப்ரவரி (ஹி.ச.)

ஈரோடு திண்டலில் பிரசித்தி பெற்ற வேலாயுதசுவாமி, அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 5.30 மணி முதல் யாத்ரா தனம் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 6.45 மணி முதல் 7 மணி வரை, ஸ்ரீ வேலாயுத சுவாமி, ஸ்ரீ அபிராமி அம்மன் உடனமர் அமிர்த கடேஸ்வரர் மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 7.10 மணி முதல் 7.45 வரை, ஸ்ரீ வேலாயுத சுவாமி ஸ்ரீ அபிராமி அம்மன் உடனமர் அமர்தகடேஸ்வரர் மற்றும் அனைத்து பரிவார மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, மேளதாளங்கள் முழங்க கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் கோஷமிட்டனர்.

தொடர்ந்து, ராஜகோபுரத்தில் இருந்த கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பச்சைக் கொடி காட்டவும் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், அபிராமி அம்பிகை உடனுறை அமிர்தகடேஸ்வரர் சன்னதிகளில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டது. டிரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.

மாலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தசதானம், தச தரிசனம், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி, ஈரோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, மாவட்ட எஸ்.பி சுஜாதா, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார், மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட அறக்காவலர் குழுத்தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b