தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர் - அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாக.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திற்கான இ
Archana


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து

7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாக.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்.

2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நிலவரப்படி 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 பேர் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி, சுமார் 99 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களாக மாறியதாக பேசினார்.

அதன் தொடர்ச்சியாக ஜனவரி 31 ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் ஆட்சேபனைகளுக்கு பிறகு தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 617 மூன்றாம் பாலினத்தவரும் இருப்பதாகவும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின் படி அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 991 வாக்காளர்கள் இருப்பதாகவும், குறைந்தபட்சமாக ஒரு துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 896 பேர் இருப்பதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைத்தளமான https://elections.tn.gov.in பக்கத்தில் பார்க்கலாம் எனவும், 1.1.2026 அன்று 18வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் தங்களின் பெயரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம் எனவும் அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ