திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி உடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை
சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச) திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி உடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர்
Kanimozhi MP


Girish


சென்னை, 23 பிப்ரவரி (ஹி.ச)

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி உடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த சந்திப்பு சுமார் ஒன்னரை மணி நேரம் நடைபெற்றது.

இதனை அடுத்து கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது,

நேற்று முதலமைச்சர் உடன் கே.சி.வேணுகோபால் சந்தித்து பல்வேறு விவகரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அதில் எத்தனை தொகுதிகள் என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. மாநிலங்களவை, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது.

ஆட்சியில் பங்கு என்பது குறித்த கேள்விக்கு, முதலில் தொகுதி எண்ணிக்கை இறுதி செய் வேண்டும் அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தை குழுவும் அமர்ந்து பேசுவார்கள்.

என தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ