அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஜல்லிக்கட்டு கோலாகலம்
புதுக்கோட்டை, 23 பிப்ரவரி (ஹி.ச) புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது. ஜ
Jallikattu festivities


புதுக்கோட்டை, 23 பிப்ரவரி (ஹி.ச)

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார்.

தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 750 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 270 மாடு பிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை அடக்க முற்பட்டு வருகின்றனர். காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பட்டுப்புடவை, கட்டில், மின்விசிறி மற்றும் எவர்சில்வர் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தவைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b