கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இறுதி கட்ட வாதம் துவங்கியது - குற்றம் சாட்டப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
கோவை, 24 பிப்ரவரி (ஹி.ச.) கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியை
A


கோவை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும் ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அச்சம்பத்தில் தொடர்புடைய சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை சுட்டுப்பிடித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட வாதம் இன்று தொடங்கி உள்ளது. இதற்காக கைது செய்யபட்ட சதீஷ்,காளீஸ்வரன்,தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இன்று அரசு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படும், நாளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதம் முன்வைக்கபடும்.

பின்னர் இறுதி கட்ட விசாரணை நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J