Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 24 பிப்ரவரி (ஹி.ச.)
காரைக்காலில் முன்னாள் மேயர் செவாலியர் பக்கிரிசாமி பிள்ளைக்கு 1956 ஆம் ஆண்டு ஜவகர் நற்பணி மன்றம் சார்பில் காரைக்கால் நகராட்சி திருமண மண்டப வாயிலில் சிலை அமைக்கப்பட்டது.
அப்போது சிலை அமைத்த ஜவகர் நற்பணி மன்றத்தின் பெயரில் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது.
தற்போது காரைக்கால் தெற்கு சட்டமன்ற தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஏ.எம்.எச்.நாஜிம் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து செவாலியர் பக்கிரி சாமிப் பிள்ளையின் சிலை அருகே பூங்கா அமைத்து தருவதாக கூறி சிலையை சுற்றி ஒரு சில வேலைப்பாடுகள் செய்துவிட்டு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை எடுத்துவிட்டு தனது பெயரில் கல்வெட்டு வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது தேர்தல் நெருங்குவதால் சோழிய வெள்ளாளர்களின் வாக்குக்காக இதனை திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் செய்திருப்பதாகவும் உடனடியாக சிலையை நிறுவிய ஜவகர் நற்பணி மன்றத்தின் கல்வெட்டை அங்கு வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாஜக சார்பில் மாநில செயலாளர் துரை சேனாதிபதி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்துள்ளார்.
Hindusthan Samachar / Durai.J