டெல்லியில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்
புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.) டெல்லியிலிருந்து லே நோக்கிப் பயணித்த ஸ்பைஸ்ஜெட் விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், டெல்லி சர்வதேச விமான
டெல்லியில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்


புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)

டெல்லியிலிருந்து லே நோக்கிப் பயணித்த ஸ்பைஸ்ஜெட் விமானம், இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து லே விமான நிலையத்திற்கு இன்று காலை 6.45 மணியளவில் புறப்பட்டது.

150 பயணிகளுடன் சென்ற இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் இரண்டாவது இயந்திரத்தில் பிரச்சினை இருப்பதைக் விமானிகள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, முழு அவசர தரையிறக்கத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது.

உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தைத் தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இயந்திரக் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM