Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டுக்குள் கடந்த
20-ம் தேதி நுழைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், தாங்கள் அணிந்திருந்த டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
அவர்கள் அணிந்திருந்த டி சர்ட்களில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்துக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் இன்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப் கைதுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
நாட்டின் சூழல் மோசமடைந்துள்ளது. பிரதமர் மோடி நாட்டையே அழித்துவிட்டார்.
காங்கிரஸ், அதன் இளம் தலைவர்களை மிரட்ட பாஜக முயற்சி செய்கிறது. காங்கிரசிடையே பயத்தை விதைக்க வேலை செய்கின்றனர்.
காங்கிரஸ் கோழைத்தனமானது அல்ல, என அதில் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b