நல்லகண்ணு  சிறுநீரகம் செயல் இழந்து விட்டது, முகம் கருத்துவிட்டது என கண்ணீர் உடன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான்
சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் அரசு மருத்துவ
Mansoor


Nallakannu


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை ராஜீ்வ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் அரசு மருத்துவமனை வருகை புரிந்தார்.

மருத்துவமனையில் உள்ள நல்லகண்ணு குடும்பத்தாரிடமும், மருத்துவர்கள் இடமும் நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை குறித்து மன்சூர் அலிகான் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது,

சிறுவனாக இருந்த போது பள்ளிக்கூடத்தில் இருந்தே விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். வெள்ளையனுக்கு எதிராக பள்ளிப்பருவத்திலே தனது போராட்டத்தை ஆரம்பித்தவர்.

அவரது வாழ்க்கையில் உன்னத மனிதராக இதுவரை வாழ்ந்து வந்தவர். இப்போது மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஐயா நல்லகண்ணு சிறுவனாக இருந்த போது மட்டுமல்ல வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல சுதந்திரத்திற்கு பிறகும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்திற்கு பிறகு தடை செய்யப்பட்ட பொழுது தேடி தேடி அவரை கைது செய்தார்கள். ஆனால் அப்போது கூட மக்களுக்காக போராடியவர்.

இந்தியா சுதந்திரப் பெற்ற பிறகும் தமிழ்நாட்டில் காவல்துறை அவருடைய மீசையை சிகரெட் ஆள் சுருக்கி சொல்ல சொல்லி வற்புறுத்தியது. பல இன்னல்களை சந்தித்தவர்.

இருந்தும் கொள்கையை விட்டுக் கொடுக்காத உழைப்பாளியாக வாழ்ந்து வந்தார். தற்போது அவரது முகங்கள் கருத்து விட்டது என கூறி செய்தியாளர் சந்திப்பின் போது கண்கலங்கி பேசினார் மன்சூர் அலிகான்

அவர் வாழ்ந்த இந்த மண்ணில் தமிழராக நானும் வாழ்ந்தது பெருமையாக நினைக்கிறேன் எனவும் அவர் மிக எளிமையானவர் எனவும் தெரிவித்தார்.

அவரது சிறுநீரகம் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ