Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)
நத்திங் நிறுவனம் பட்ஜெட் விலை வாசிகளை குறிவைத்து அதன் அடுத்த புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
இந்நிறுவனம் வருகிற 2026 மார்ச் 5 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் உலகளவில் அதன் நத்திங் ஹெட்போன் ஏ மாடல் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது போல் தெரிகிறது.
நத்திங் ஹெட்போன் ஏ மாடல் ஆனது நத்திங் ஹெட்போன் 1 மாடலுக்கான புதிய குறைந்த விலை மாற்றாக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஹெட்போன் சிங்கப்பூரின் ஐஎம்டிஏ சான்றிதழை பெற்றுள்ளதால், மார்ச் 5 ஆம் தேதி அன்றோ அல்லது அதன் பின்னரோ அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
நத்திங் ஹெட்போன் ஏ மாடல் ஆனது டிரான்ஸ்பரென்ட் டிசைனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹெட்போன் 1 க்கு ஒரு மலிவு விலை மாற்றாக இருக்கும் என்பதால் - இதன் விலை நிர்ணயமும் இங்கே முக்கியமாகும்.
ஹெட்போன் ஏ மாடல் ஐரோப்பாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.17,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்தியாவில் ஹெட்போன் 1 மாடல் ஆனது ரூ.21,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, எனவே ஹெட்போன் ஏ மாடல் ஆனது ரூ.15,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஹெட்போன் 1-ஐ வாங்க விரும்புவோருக்கு, ஆனால் அவ்வளவு பணம் செலுத்த விரும்பாதவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
Hindusthan Samachar / JANAKI RAM