Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியை பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM