காஞ்சிபுரம் மாவட்டத்தின் 66-வது மாவட்ட ஆட்சியராக சினேகா இன்று பதவியேற்பு
காஞ்சிபுரம், 24 பிப்ரவரி (ஹி.ச.) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக, ஆட்சிய
Sneha takes oath


காஞ்சிபுரம், 24 பிப்ரவரி (ஹி.ச.)

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் - பொருளியல் மற்றும் புள்ளியல் துறை இயக்குநராக, ஆட்சியர் ஆர். ஜெயாவுக்கு பதிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், காஞ்சிபுரத்தின் ஆட்சியர் பதவிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த த. சினேகா நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன், அம்மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் 66 வது மாவட்ட ஆட்சியராக சினேகா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு முறைப்படி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு அதிகாரிகள். அலுவலர்கள். ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட உடனே சினேகா உடனடியாக பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / vidya.b