Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 பிப்ரவரி (ஹி.ச.)
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை வழங்கி வருவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,
இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுலுக்கு போதிய அறிவு இல்லை. அவர் தேசத்தை தவறான பாதைக்கு வழி நடத்துகிறார். நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார். உள்நாட்டுப் போரை விரும்பும் ராகுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
என்று கூறினார்.
இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் சரணடைந்து விட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ராகுல் மீது வழக்கு தொடர வேண்டும் என்று கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM