தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பிப்ரவரி 27-ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.) சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டி
தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பிப்ரவரி 27ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை - கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு


சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச.)

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தைக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் தோழர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

நான்கு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தைக் குழு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தி.மு.கழக தலைமையோடு தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை நடத்த தோழர்கள் மு.வீரபாண்டியன், (மாநிலச் செயலாளர்) இரா.முத்தரசன், கே.சுப்பராயன் எம்.பி., கோ.பழனிசாமி ஆகிய நான்கு உறுப்பினர்கள் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு வரும் பிப்ரவரி 27ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்

இவ்வாறு அறிக்கையில் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட சந்திப்பை முடித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b