Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 பிப்ரவரி (ஹி.ச)
ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் இருந்து மதுரைக்கு பிப்ரவரி 25 (நாளை), மார்ச் 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சிறப்பு ரெயில் (வண்டி எண் 01927) இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில் கான்பூரில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து கான்பூருக்கு பிப்ரவரி 27, மார்ச் 6, 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரெயில் (01928) இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூரை சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (24-ந் தேதி) மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b