நீர் வழி சுரங்க பாதையில் ஸ்ரீ நாராயண குருவின் போதனை - பிப்ரவரி 26 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்
திருவனந்தபுரம் , 24 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வர்க்கலா அருகே சிலாக்கூரில் உள்ள நீர் வழி சுரங்கப்பாதையானது சுமார் 350 மீட்டர் நீளமுள்ள உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட
waterway tunnel


திருவனந்தபுரம் , 24 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வர்க்கலா அருகே சிலாக்கூரில் உள்ள நீர் வழி சுரங்கப்பாதையானது சுமார் 350 மீட்டர் நீளமுள்ள உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது.

இந்த நீர்வழி சுரங்க பாதை தற்போது நாட்டிலே முதல் முறையாக ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம் மேற்கொள்ளும் வகையில் சீரமைக்கப்பட்டு உள்ளது.

அதனை முதல்-மந்திரி பினராயி விஜயன் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த புதிய சிலாக்கூர் நீர் வழி சுரங்க பாதையில் ஸ்ரீ நாராயண குருவின் போதனை மற்றும் கேரள வரலாற்றை மையமாக கொண்ட 3 டி தொழில் நுட்பத்துடன் கூடிய ஒளி-ஒலி நிகழ்ச்சி ஒளிபரப்படும்.

இதுகுறித்து கேரள நீர்வழி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் சுகாஸ் கூறுகையில்,

சுற்றுலா பயணிகள் சுரங்க பாதையின் உள்ளே ஒளி - ஒலி காட்சிகளை கண்டு ரசிக்க ஒரு மின்சார படகு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. சுரங்கப்பாதையின் மேற்பரப்பில் மேப்பிங் நவீன தொழில்நுட்பத்தால் இயக்கப்படும். இந்த ஒளி - ஒலி நிகழ்ச்சி ரூ.4.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் அழகிய நிலப் பரப்பு ஆகியவற்றுடன் பார்வையாளர்களை அழைத்து செல்லும் ஒரு 3 டி வீடியோ ஒளிபரப்பாகும். இது கேரளாவில் நீர் வழி சார்ந்த சுற்றுலாவுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும், என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b